The PPST Group
Celebrating the Birth Centenary of Shri Dharampal


20-8-2021
பத்திரிகை அறிக்கை
மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்:
கோவிட் தொற்றைத் தடுப்பதற்கும், குணப்படுத்தவும் இந்திய மருத்துவத் துறைகளைச் செம்மையாகவும், முழுமையாகவும் உபயோகிக்கக் கோரிக்கை
சுமார் 700 விஞ்ஞானிகள், தொழில்நுட்பவல்லுனர்கள், மற்றும் இந்திய மருத்துவ முறைகளில் தேர்ந்த மருத்துவர்கள், நம் மாண்புமிகு பிரதமருக்குக் கோவிட் தொற்றைத் தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் இந்திய மருத்துவமுறைகளைச் செம்மையாகவும் முழுமையாகவும் உபயோகிக்கக் கோரும் விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளனர். பி. பி. எஸ். டி. குழுவின் சார்பாக அனுப்பப்பட்டுள்ள இந்த விண்ணப்பத்திற்கு பத்மஸ்ரீ விருது பெற்ற பதினொரு நபர்களும், பத்மபூஷன் விருதுபெற்ற மூவரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டவர்கரில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் 210. தவிர 300க்கும் அதிகமானவர்கள் இந்திய மருத்துவ முறைகளில் தேர்ந்த மருத்துவர்கள். அவர்களுள் 46 சித்த மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் கோவிட் தொற்று நோயாளிகளுக்குத் தாமே சிகிச்சை அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன மருத்துவத்தில் தேர்ந்த 20 அனுபவம் மிக்கவர்களும் இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளவர்களில் பலரும் தங்கள் துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்கள், அல்லது இருப்பவர்கள். அவர்களில் பலர் ஓய்வுபெற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பெரும் நிறுவனங்களின் இயக்குனர்கள், மற்றும் ஓய்வுபெற்ற மத்திய மாநில அரசுகளின் செயலாளர்களும் ஆவர்.
இந்த விண்ணப்பத்தில் கோவிட்19 தொற்றின் பரவலைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் இந்திய மருத்துவ-முறைகளைப் பரவலாகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்திய பல்வேறு முயற்சிகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் தனி மருத்துவர்களால் மேற்கொள்ளபட்டன. எனவே இந்த விண்ணப்பம் அறிவுறுத்துவது பின்வருமாறு: மேற்கூறிய முயற்சிகளின் வெற்றிகள் இந்திய மருத்துவ முறைகள் நாட்டின் ஆரோக்கிய நலசேவைத் திட்டங்களுடன் ஒன்றியதாய் அமைய வேண்டும் என்பது. தவிர, நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை வழங்கும் பொருட்டு இந்திய மருத்துவ முறைகள் பரந்த அளவில் உபயோகிக்கப்பட வேண்டும். இவ்வாறு இணைந்து செயல்படுவது நம் ஆரோக்கிய நலசேவைகள் முன்னேற வழி வகுக்கும். மேலும் அவ்வாறு இந்திய மருத்துவங்களை பெருமளவில் உபயோகிக்கும் போது அம்மருத்துவங்களின் செயல்திறமை குறித்த தகவல்களைப் பெரிய அளவில் விஞ்ஞானபூர்வமாகத் திரட்ட முடியும்.
இந்த விண்ணப்பத்தை அளிப்பதில் முன்னின்று செயல்படுத்தியவர்கள் பி. பி. எஸ். டி. (Patriotic and People-oriented Science and Technology) குழுவினர். 1980களில் அமைக்கப்பட்ட இக்குழு பெரும்பாலும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டது. இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்பம் உயிரோட்டமுடையதாய் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அமையவேண்டும் என்ற நோக்குடன் இக்குழுவினர் செயல்பட்டனர். இந்த இலக்கை அடைய, இந்திய மரபில் வந்த விஞ்ஞானங்களும் மற்றும் அறிவுத்துறைகளும் பேணப்படவேண்டியது அவசியம் என்று உணர்ந்தனர். இவர்கள் இந்திய மரபில் விளங்கிய விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வரலாறு, மெய்காண்முறை, செயல்திறன் என்பன குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த விண்ணப்பத்திற்குப் பல்வேறு துறைகளின் பெரும் வல்லுநர்கள் அளித்துள்ள ஆதரவைப் பார்க்கும்போது இந்திய மருத்துவ முறைகள் நாட்டின் ஆரோக்கிய நலசேவைத் திட்டங்களுடன் ஒன்றியதாய் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக மேலோங்கியிருப்பது தெரிகிறது. தற்போதைய கடுமையான காலக்கட்டத்தில் இது மேலும் உறுதியாகிறது. பேரழிவுகள் ஏற்படும் காலங்களில் தான் நாடெங்கும் வாய்ப்புகளும் உண்டாகின்றன. இந்திய மரபு சார்ந்த அறிவுத்துறைகளையும் மருத்துவ முறைகளையும் நம் நாட்டின் ஆரோக்கிய நல அமைப்பின் அங்கமாக்க இது ஒரு மகத்தான வாய்ப்பு.
இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு ஆதரவு அளித்துள்ளவர்கள் அனைவரின் எண்ணமும் இந்த அரிய வாய்ப்பு வீணாகி விடக்கூடாது என்பதே.
பி. எல். டி. கிரிஜா
சஞ்ஜீவனி ஆயுர்வேத வைத்தியசாலா
1/341, கங்கை அம்மன் கோவில் தெரு
இஞ்ஜம்பாக்கம், சென்னை 600115
தொ: 9500071332
பி. பி. எஸ். டி குழுவின் அங்கத்தினரான டாக்டர் பி. எல். டி. கிரிஜா அவர்கள் ஆயுர்வேத சிகிச்சை முறையில் 600க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகளைக் குணபடுத்தியுள்ளார். இந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பற்றிய விவரங்கள் ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன.
உள்ளடக்கம்:
